திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திலுள்ள குப்பநத்தம் அணையில் இருந்து 47 ஏரிகளில் குறைந்துள்ள நீர்மட்டத்தை உயர்த்த, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மார்ச் 3, 2026 காலை 10 மணி முதல் மார்ச் 31, 2026 காலை 10 மணி வரை, வினாடிக்கு 240 கன அடி வீதம் 28 நாட்களுக்கு 580.80 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 9432.76 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று விவசாயிகள் பயனடைவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.