கீழ்பென்னாத்தூா்: புதிய வட்டார வளா்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புதிய வட்டார வளா்ச்சி அலுவலராக (கி. ஊ. ) கோவிந்தராஜிலு நேற்று பொறுப்பேற்றாா். செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணிபுரிந்து வந்த இவா், இடமாறுதல் பெற்று இங்கு வந்துள்ளாா். இவருக்கு, துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பணியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்தி