கார்த்திகை தீபத் திருவிழா உண்டியல் காணிக்கை இரு நாட்களாக எண்ணப்பட்டது. மொத்த உண்டியல் காணிக்கை ரூபாய் 5,25,77,520 ரொக்கமும், 229 கிராம் தங்கமும், 2380 கிராம் வெள்ளியும் வருவாய் வந்துள்ளது என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உண்டியல் 19.12.2024 அன்று கார்த்திகை தீப பௌர்ணமி உண்டியல் எண்ணப்பட்டது. அதன் விவரம் ரூபாய் 2,83,92,520 ரொக்கமும், 164 கிராம் தங்கமும், வெள்ளி 1020 கிராம். 30.12.2024 நேற்று எண்ணப்பட்டது. அதன் விவரம் வருவாய் ரூபாய் 2,41,85,000 ரொக்கமும், 65 கிராம் தங்கமும், 1360 கிராம் வெள்ளி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது என திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.