பள்ளிகள் திறப்பை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தலைமையில் நடைபெற்றது. ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள், குடிநீர், மின்சாரம், கழிவறை மற்றும் சமையலறை வசதிகளை முறையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேல்நிலை நீர்த்தொட்டிகளை தூய்மைப்படுத்தி பதிவேடுகள் பராமரிக்கவும் வலியுறுத்தினார். கூட்டத்தில் கல்வித்துறை மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி