தி.மலை: பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்; கலெக்டர் தகவல்

தமிழகத்தில் பெண் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் 1992-இல் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. சமுதாயத்தில் பெண்களின் நிலையை உயர்த்திடும் உணர்வுடனும், பெண் சிசுக் கொலையை அறவே ஒழித்திடும் நோக்குடனும், கல்வியில் பெண்களின் நிலையை உயர்த்தும் பொருட்டு 2001 முதல் மறுவடிவாக்கம் செய்யப்பட்ட பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இந்தத் திட்டத்தின்படி, ஒரு பெண் குழந்தைக்கு ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதிப் பத்திரமும், இரு குழந்தைகளுக்கு தலா ரூ. 25 ஆயிரமும் வைப்பு நிதிப் பத்திரம் ஏற்கெனவே வழங்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த வைப்பு நிதி பத்திரத்தைப் பெற்று 18 வயது நிறைவடைந்த சில பயனாளிகள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இதனால் அவர்களைக் கண்டறிய இயலவில்லை. அவ்வாறு கண்டறிய இயலாத பயனாளிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

எனவே, முதிர்வுத்தொகை பெறாத பயனாளிகள் தங்கள் விவரங்கள் இணையதளத்தில் இருப்பின் மாவட்ட சமூகநலஅலுவலகத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி