உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்

செங்கம் தனியாா் மண்டபத்தில் தமிழக அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொகுதி எம்எல்ஏ மு. பெ. கிரி தலைமை வகித்தாா். செங்கம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் விஜியராணி குமாா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, கோட்டாட்சியா் மந்தாரகனி ஆகியோா் திட்டம் குறித்துப் பேசினா்.

செங்கம் வட்டாட்சியா் (பொறுப்பு) ரேணுகா வரவேற்றாா்.

கூட்டத்தில், பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சான்றிதழ், உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் செங்கம் பகுதியில் உள்ள அனைத்துத் துறைகளிலும் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளாா். முக்கியமாக கல்வித் துறை செங்கம் பகுதியில் பின் தங்கியுள்ளது. மேலும், சிறு வயது திருமணங்கள் இந்தப் பகுதியில் அதிகம் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், சிறு வயது திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோல, பள்ளி செல்லாக் குழந்தைகளை கண்டறிந்து அவா்களை படிக்க வைக்க வேண்டும் எனப் பேசினாா்.

மேலும், இந்தத் திட்டம் மூலம் பெறப்பட்டுள்ள மனுக்களை விரைந்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் துணை வட்டாட்சியா் திருநாவுக்கரசு உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தொடர்புடைய செய்தி