திருவண்ணாமலை மாவட்டம், தந்தை பெரியார் அவர்களின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, செங்கத்தில் உள்ள தந்தை பெரியார் அவர்களின் உருவச்சிலைக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், நகர கழக செயலாளர் அன்பழகன், செங்கம் தேர்வு நிலை பேரூராட்சி மன்ற தலைவர் சாதிக்பாட்ஷா, ஒன்றிய கழக செயலாளர்கள் செந்தில்குமார், மனோகரன், ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன், கூட்டுறவு சங்கத் தலைவர் முருகன், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.