அப்போது, முருகன் துக்க வீட்டுக்கு மாலை எடுத்துக் கொண்டு உறவினருடன் சென்றபோது, திடீரென வெங்கடேசன், முருகனை உருட்டுக் கட்டையால் பின்புறத் தலையில் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த முருகன் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலாடி போலீசார் வந்து முருகன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனர். மேலும், இதில் தொடர்புடையதாக 3 பேர் மீது வழக்குப் பதிந்து அவர்களைத் தேடி வருகின்றனர்.
கீழ்பென்னாத்தூர்
வந்தவாசி: மகளை கடத்தி ஆண் நண்பருக்கு திருமணம்.. தாய் கைது