சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த செ. நாச்சிப்பட்டு சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், புதுப்பானையில் பொங்கல் வைத்து, கரும்பு, மஞ்சள் போன்றவற்றை சுவாமிக்கு படைத்தனர். கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் புத்தாடைகள் அணிந்து இதில் கலந்துகொண்டனர். கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கல்லூரித் தலைவர் வெங்கடாசலபதி மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர் ரேகா ரெட்டி, பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் விழாவில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி