பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய கோரிக்கை!

திருவண்ணாமலை, மே 27: செங்கம் பகுதியில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் உழவர் உரிமை இயக்க மாநில தலைவர் அருள்ஆறுமுகம் பங்கேற்று பேசினார். 2026 சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அவர், தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி