தூக்குப்போட்டு கல்லூரி மாணவி தற்கொலை!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா கீழபுதுப்பாக்கம் கிராமம் பசும்பொன் நகரை சேர்ந்தவர் அச்சுதன். இவர் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிராம உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

இவர்களது இரண்டாவது மகள் ஸ்ரீபிரியா(வயது 20), செய்யாறில் உள்ள அரசு கல்லூரியில் பி. ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு தற்போது விடுமுறை விடப்பட்டுள்ளது. தாய், தந்தை இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் ஸ்ரீபிரியா வீட்டில் தனியாக இருந்தார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்ரீபிரியா துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கு போட் டுக்கொண்டார். அப்போது கழுத்து இறுகிய போது கூச்சலிட்டுள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஸ்ரீபிரியாவை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது ஸ்ரீபிரியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தந்தை அச்சுதன் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்ப திவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி