இந்தக் குவாரிகளில் இருந்து வாகனங்களில் ஏற்றிச்செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதிக்கப்பட்டுள்ள அளவைவிட கூடுதலாக கனிமங்களை ஏற்றிச் செல்வதை தடுக்கும் வகையில் வழங்கப்படும் நடைச்சீட்டு (பர்மிட்) இணையதளம் மூலம் வழங்கும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கல் குவாரி குத்தகைதாரர்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்கும் நடைச்சீட்டு விண்ணப்பங்கள் உடனுக்குடன் பரிசீலனை செய்து இ-பர்மிட் வழங்கப்படுகிறது.
இதுதவிர, திருவண்ணாமலை மாவட்ட கல் குவாரி குத்தகைதாரர்களால் இ-பர்மிட் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வசதியை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கல் குவாரி குத்தகைதாரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்தார்.