சென்னை: திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு இன்று காலை மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது. இதுவரை 4 முறை நடிகை திரிஷா விட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி