சேத்துப்பட்டு அருகே நம்பேடு கிராமத்தில் இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். வில்லரசு என்பவர் பைக்கில் சாகசமாக சென்றபோது இருசக்கர வாகனங்கள், நடந்து சென்ற பெண்கள் மற்றும் கார் மீது மோதினார். இதில் அமுதா (47) சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் மீனா, பிரசாந்த், அமராவதி மற்றும் வில்லரசு உட்பட 5 பேர் காயமடைந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.