திருவண்ணாமலை: கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சே. கூடலூர் சமுதாயக்கூடத்தில் நேற்று (டிசம்பர் 28) கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஏடி இந்தியா திட்ட மேலாளர் உஷா தலைமையில் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயஸ்வரி, தீபா முன்னிலை வகித்தனர். ஒன்றிய கருத்தாளர் புகழேந்தி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக பிடிஓ பரிமேலழகன், மகளிர் காவல் நிலைய எஸ்ஐ தமிழரசி, மண்டலதுணை பிடிஓ கவிதா ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சைக்கிள், கல்வி உதவித்தொகை வங்கிக் காசோலை வழங்கி பேசினர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ், ஊராட்சி செயலாளர்கள் செல்வம், உதயா, சரத்குமார், சேகர், ஒன்றிய கருத்தாளர் அபிராமி நன்றி கூறினர்.

தொடர்புடைய செய்தி