திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அணியின் மாவட்ட அமைப்பாளர் ஏ. ஏ. ஆறுமுகம் தலைமை வகித்தார். முத்தமிழ் கலை மன்றத்தின் நிறுவனர் தலைவர் ஆ. தே. முருகையன், திருவண்ணாமலை தமிழ்ச் சங்கச் செயலர் க. காதர்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர திமுக செயலர் ப. கார்த்திவேல்மாறன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, தமிழகத்தில் ஹிந்தி திணிப்பு வேண்டாம் என்ற விழிப்புணர்வு வில்லைகளை ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் மற்றும் கனரக வாகனங்கள், பேருந்துகளில் ஒட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும், பொதுமக்கள், வியாபாரிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதில், மாநகர ஆதிதிராவிடர் நலக் குழுவின் அமைப்பாளர் எம். குணா (எ) குணாளன், வட்டச் செயலர் டி. எல். எம். வினோத்குமார், மோகன்ராஜ், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் கே. விஜி, எஸ். ஏழுமலை, தேசிங்கு, சுரேஷ், அன்பு பாலாஜி, பி. அருண்குமார், பி. செல்வராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.