அப்போது, இந்த தீர்மானத்தில் அதிமுக உறுப்பினர்கள் கையொப்பமிடாவிட்டால், திமுக உறுப்பினர்கள் மற்றும் திமுக ஆதரவு உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றுவோம் என பஞ்சாயத்து தலைவர் கூறினாராம். இதனைக் கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர், கூட்டம் முடித்து அலுவலக அறைக்கு வந்த செயல் அலுவலரிடம் செங்கம் அதிமுக ஒன்றியச் செயலரும், பேரூராட்சி உறுப்பினருமான மகரிஷிமனோகரன் தலைமையில் உறுப்பினர்கள் வேலு, ஜெயவேல், மீனா, லட்சுமி, சின்னத்தாய் ஆகியோர் கடந்த மூன்று மாதங்களாக செங்கம் நகரில் நடைபெற்ற திட்டப் பணிகளின் விவரம் மற்றும் அதன் செலவினங்கள் குறித்து கேட்டனர்.
அப்போது, செயல் அலுவலருக்கும், அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.