கூட்டத்தில் ஆட்சியர் பேசியது: காக்கும் கரங்கள் திட்டம் மூலம் முன்னாள் படை வீரர்கள், ராணுவப் பணியின்போது இறந்த படை வீரர்களின் மறுமணமாகாத கைம்பெண்கள், முன்னாள் படை வீரர்களைச் சார்ந்த திருமணமாகாத மகள்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களைச் சார்ந்த மறுமணமாகாத கைம்பெண் மகள்கள் ஆகியோர் தொழில் தொடங்க ஏதுவாக ரூ. ஒரு கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.
இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 சதவீத மூலதன மானியமும், 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோருக்கு திறன் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.