கடந்த 12. 05. 2023-ந் தேதி தண்டராம்பட்டு சாலையில் உள்ள தேனிமலை மாரியம்மன் கோவிலில் உள்ள உண்டியல் காணவில்லை என அக்கோவிலின் தர்மகர்த்தா திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து தி. மலை நகர குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் N. கோமளவள்ளி தலைமையில் தனிப்படை அமைத்து நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், உண்டியல் திருட்டில் ஈடுபட்ட 2 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.