வேலூரில் கூட்டு பாலியல் வன்கொடுமை - 6 பேர் மீது வழக்கு..

வேலூரில் இளம்பெண் மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த இளம்பெண் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "செய்யாறு பகுதியைச் சேர்ந்த அல்தாப் தாசின் என்பவரிடம் ரூ.1.75 கோடிக்கு சீட்டு கட்டிய நிலையில் ரூ.40 லட்சம் மட்டும் கொடுத்தனர். மீதி பணத்தை வேலூரில் உள்ள ஒரு விடுதியில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும். அதிக பணம் என்பதால் பொது இடத்தில் கொடுத்தால் பிரச்சனை வரும் ஆகவே விடுதிக்கு வாருங்கள் என்று கூறிய நிலையில் கடந்த நவம்பர் 3ம் தேதி தாயாருடன் வந்தோம். 

அப்போது கிரிஜா, புவனா, தேவி, ராஜ்குமார், மகேஷ் குமார் ஆகியோர் கொண்ட கும்பல் பணத்தை கொடுக்க முடியாது என மிரட்டி தாக்கினார். மேலும் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அல்தாப் தாசின், மகேஷ் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு வீடியோ எடுத்து வைத்து வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்கள். மேலும் மயக்கம் தெளிந்த பிறகு தான், நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிந்தது," என தெரிவித்துள்ளார். பின்னர் அல்தாப் தாசின் உள்ளிட்ட 6 பேர் மீது வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி