திருவண்ணாமலை மாவட்டம், சேவூர் கிராமத்தைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் பாபு (வயது 29). இவர், அந்த ஊரில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக ஆரணி கிராமிய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சேவூரில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அருகே கோயில் தெருவின் பின்புறம் முள்புதரில் பாபு என்பவர் மறைந்திருந்தார். போலீசார் அவரை மடக்கிப் பிடித்து அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.