அதன்படி, ஆரணி அருகே தச்சூர், அரையாளம், மோட்டூர், வடுக்கசாத்து, தேவிகாபுரம், பத்தியாபுரம், மேட்டுக்குடிசை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 1 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், நேற்று பெய்த திடீர் கனமழையால் ஆரணி அருகே தச்சூர் கிராமம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மண்பாண்ட தொழிலாளி மணி (45) என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் அவரது மனைவி பச்சையம்மாள், ஒரு மகன், 2 மகள்கள் உட்பட 5 பேரும் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து ஆரணி வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
குதிரை பேரம் விவகாரம்.. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி