திருவண்ணாமலை: திருமண மஹாலில் மின்சாரம் தாக்கி தொழிலாளர் பலி

தண்டராம்பட்டு சாலையில் உள்ள மாதவி பன்னீர்செல்வம் திருமண மஹாலில் திருமண அலங்காரப் பணி நடைபெற்றது. அப்போது, பெரிய ஏணியை தள்ளிச் சென்றபோது மேலே சென்ற மின் கம்பியில் ஏணி பட்டதால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சந்துபேரா (27) என்ற தொழிலாளி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், சையன் சமந்தா, ராதாகான், அபிஜித் உள்ளிட்ட 3 வடமாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி