ஆரணி: மணல் கடத்திய வாகனம் பறிமுதல்

ஆரணி அடுத்த தச்சூர், மோட்டூர், அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள செய்யாற்றில் டிராக்டரில் மணல் கடத்தல் நடப்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், தாலுகா போலீஸ் எஸ்ஐ அருண் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வடுக்கசாத்து கிராமத்தில் உள்ள ஆரணி-தச்சூர் செல்லும் சாலையில் அதிவேகமாக வந்த டிராக்டரை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது, டிராக்டர் நிற்காமல் சென்றதால், போலீசார் தூரத்தில் சென்று சாலையில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார். தொடர்ந்து, விசாரணையில் தச்சூர் பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. 

உடனே, டிராக்டர் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும், மணல் கடத்தி வந்து தப்பி சென்ற டிராக்டர் டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி