தொழிற்சங்கத்தினா், விவசாயிகள் முன்னணியினா் மறியல் போராட்டம்.

மத்திய பாஜக அரசைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் ஆரணியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. ஆரணி நகர காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்விநாயகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சாலை மறியல் செய்த 75 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனர்.

தொடர்புடைய செய்தி