திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ராயண்டபுரம் கிராம ஏரியில் வளர்க்கப்பட்ட லட்சக்கணக்கான மீன்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தன. சுமார் 250 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியை குத்தகைக்கு எடுத்து, மீன் வியாபாரி சண்முகம் கடந்த 9 மாதங்களாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டிருந்தார். பருவநிலை மாற்றம் காரணமாக காற்றோட்டம் குறைந்து, ஏரியில் பல டன் மீன்கள் செத்து மிதந்தன. பல லட்ச ரூபாய் முதலீடு வீணானதால், உரிமையாளர் சண்முகம் மிகுந்த வேதனையில் உள்ளார்.