திருவண்ணாமலை: லாரி மீது பைக் மோதி இளைஞர் பலி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியதில் ரகுபதி (20) என்ற இளைஞர் உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். ஆரணி அருணகிரிசத்திரம் அருகே நான்கு இளைஞர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதியதில் இந்த விபத்து நேரிட்டது. காயமடைந்த மூவர் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். ஆரணி நகர போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி