திருவண்ணாமலை: தொழிற்பள்ளிகள் தொடங்குவோா் விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-26-ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற்பிரிவுகள் மற்றும் தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அங்கீகாரம் பெற விரும்பும் ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்குத் தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ. 8 ஆயிரம் செலுத்தி பிப். 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி