திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவம்பர் 5 ஆம் தேதி ஐப்பசி பௌர்ணமி மற்றும் நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கிய நிலையில், நவ.20 காலை திருக்கல்யாண மண்டபம் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் இருந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் 3 கோடியே 47 லட்சத்து 56 ஆயிரம் 689 ரூபாய் ரொக்கமாகவும், 104 கிராம் தங்கமாகவும், 2,690 கிராம் வெள்ளியாகவும் காணிக்கையாக பெறப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி