தி.மலை: கிணற்றில் சடலமாக மிதந்த பள்ளி மாணவி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ஜெய்பீம் நகரைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி அபிநயா (16) பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தண்டராம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி