நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ஜீனாபெட்ஸி வரவேற்றாா். சீனியா் செகண்டரி பள்ளி முதல்வா் இந்துமதி பள்ளியின் கல்வி செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.
பின்னா் தனித்திறன் போட்டி முடிந்ததும் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிறைவில் பள்ளியின் கூடுதல் தாளாளா் சித்ரா ரமேஷ் நன்றி கூறினாா்.