திருவண்ணாமலை: திடீரென மூடப்பட்ட மதுக்கடை - முற்றுகையிட்ட மதுப்பிரியர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் டாஸ்மாக் கடை திடீரென மூடப்பட்டதால் ஆத்திரமடைந்த மதுப்பிரியர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று கடையை மோதியுள்ளார். மேலும், காலி மதுபாட்டிலுக்குப் பத்து ரூபாய் கொடுக்க தாமதமானதால், மதுப்பிரியர்கள் சிலர் கடையின் மீது பீர் பாட்டில்களை வீசியுள்ளனர். இதனால் பதட்டம் நிலவியதால் ஊழியர்கள் கடையை மூடிவிட்டுச் சென்றனர். இதைத் தொடர்ந்து ஏராளமான மதுப்பிரியர்கள் கடையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி