இதனால், மாணவர்கள் அமர்ந்து தற்போது வகுப்பறைகள் இல்லாததால் மரங்கள் நிழலிலும், பள்ளி வரண்டாவிலும் அமர்ந்து நிலை உள்ளது. மேலும், ஒவ்வொரு வகுப்புக்கும் சுழற்சி முறையில் மரத்தடியில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்கு பொதுமக்கள் புகார் அனுப்பினர். இதுகுறித்து மதிப்பீடு செய்து கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, நபார்டு நிதியுதவி மூலம் வகுப்பறைகள் கட்டுவதற்கு தயாராகிவிட்டது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக பொதுமக்கள் கூறினர்.
ஆனால், ஓராண்டாகியும் வகுப்பறைகள் கட்டப்படவில்லை. அதனால், விரைவில் போராட்டம் நடத்தப்போவதாக அவர்கள் தெரிவித்தனர். மாணவர், மாணவிகள் மழையிலும், வெயிலிலும் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் அவலநிலையைக் கண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.