திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக் கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு அந்தரத்தில் பறந்து அம்மனுக்கு மாலை அணிவித்தும், பொதுமக்களிடையே எலுமிச்சை, பூக்களை வீசி எறிந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். காளி, அம்மன், மகாலட்சுமி வேடமணிந்த கலைஞர்கள் நடனமாடினர். பின்னர், சுவாமி ஊர்வலம் கமண்டல நாக நதிக்கரைக்குச் சென்று மயானக் கொள்ளை விடப்பட்டது.