ஆரணி கலைக் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வங்கி மற்றும் நிதி மோசடிகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. 'துடிப்பான இளைஞர்கள் - பாதுகாப்பான எதிர்காலம், வங்கி மற்றும் நிதி மோசடிகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிட்டி யூனியன் வங்கி மேலாளர் மணிசேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு வங்கிகளின் பெயரில் நடக்கும் மோசடிகள், ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். கல்லூரி செயலர் ஏ.சி. ரவி, முதல்வர் வி. கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்தி