தி.மலை: தண்டவாளத்தைக் கடந்த பள்ளி மாணவர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் அருகேயுள்ள கஸ்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் மகன் காமராஜ் (வயது 15). இவர், கஸ்தம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில், காமராஜ் நேற்று கஸ்தம்பாடி ரயில் தண்டவாளம் அருகேயுள்ள தோப்பிற்குச் சென்று பலாப்பழம் பறித்துக் கொண்டு ரயில் பாதையை கடக்க முயன்றதாகத் தெரிகிறது. 

அப்போது, அவ்வழியாக வந்த மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயிலில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சென்று காமராஜ் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி