திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் பேரூராட்சியில், தமிழ்நாட்டில் நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினார். இந்நிகழ்வில் பேரூராட்சித் தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், திமுக ஒன்றிய செயலாளர் கி. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், செயல் அலுவலர் காவியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.