ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடி ஊராட்சிக்குள்பட்ட வேலப்பாடி, புனலப்பாடி ஆகிய பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட நெல்களங்கள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றை புதுப்பித்து அல்லது புதிய நெல்களங்கள் அமைத்துத் தர வேண்டுமெனவும் அந்தப் பகுதி விவசாயிகள் ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது. 

இதைக் கண்டித்தும், வேலப்பாடி, புனலப்பாடி பகுதிகளில் நெல்களங்கள் அமைத்துத் தரக் கோரியும் தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாய நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் விஜயகீர்த்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இதில் ஒன்றியத் தலைவர் கோபி, ஒன்றிய பொருளாளர் முத்து, வேலப்பாடி வி. எஸ். ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்டத் தலைவர் சத்தியராஜ், மாவட்ட ஆலோசகர் அரிகிருஷ்ணன் மற்றும் சேத்துப்பட்டு, கண்மமங்கலம், எஸ். வி. நகரம், மருசூர் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து விவசாயிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி