திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி, 3 டன் உப்பைக் கொண்டு திருநாரையூா் பாா்வதீஸ்வரா் சிவனுக்கு நாரை பூஜை செய்வது போன்ற ஓவியங்கள் வரையப்பட்டன. சிறப்பு ஓவிய ஆசிரியா்கள் வேலுமணி, காசி தலைமையில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் இந்த ஓவியப் பணியை மேற்கொண்டனா். மேலும், நாட்டியாஞ்சலி, இன்னிசை, பக்திச் சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அன்னதானம் பெற்றனா்.