திருவண்ணாமலை அண்ணா நகர் நுழைவு வாயிலை திறந்து வைத்த அமைச்சர்

திருவண்ணாமலை நகரம் அண்ணா நகர் நுழைவு வாயிலை பொதுப்பணிதுறை மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ. வ. வேலு திறந்து வைத்து சிறப்புரை நிகழ்த்தினார். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி முன்னிலை வகித்தார். உடன் நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, அருணை கல்விக் குழுமத்தின் துணை தலைவர் எ. வ. வே. குமரன் மற்றும் கழக மருத்துவரணி துணைத் தலைவரும் போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான டாக்டர் எ. வ. வே. கம்பன், மாநகர மேயர் வே. நிர்மலா கார்த்திக் வேல்மாறன், மாநில செயற்குழு உறுப்பினர் இரா. ஸ்ரீதர் உட்பட கழக மூத்த முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி