மேல்சீசமங்கலம்: பேருந்து பயணிகள் நிழற்கூடம் திறப்பு.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து பயணிகள் நிழற்கூடம் திறக்கப்பட்டது. இதனை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் எம். அரங்கநாதன், ஆரணி ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், நகரச் செயலா் அசோக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். இளைஞா் பாசறை ஒன்றியச் செயலா் சுகுமாா் ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

தொடர்புடைய செய்தி