திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தில் தாய் தந்தையை இழந்த ஹேமமாலினி, கௌரிசங்கர் ஆகிய குழந்தைகளுக்கு படிப்பு செலவிற்காக இன்று (அக்.,2) ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தரணிவேந்தன் அவரது சம்பளப் பணத்தில் இருந்து ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கினார். உடன் ஆரணி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.