திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தச்சூர், மேட்டூர், அகிலாண்டபுரம் ஆகிய பகுதிகளில் தாலுகா எஸ்ஐக்கள் அருண்குமார், வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தச்சூர் செய்யாற்று படுகையில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். தொடர்ந்து போலீசார், மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர். விசாரணையில், தப்பி ஓடியது தச்சூர் புதிய காலனியை சேர்ந்த ரகுநாத் (வயது 23) என்பது தெரியவந்தது.
அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். அதேபோல், ஆரணி அடுத்த மொழுகம்பூண்டி சுடுகாடு அருகே கடந்த மாதம் 22-ம் தேதி மாட்டு வண்டியில் ஆற்று மணல் கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த மொழுகம்பூண்டியை சேர்ந்த சுனில்குமார் (வயது 26) என்பவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.