ஆரணி: வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் திருட்டு

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் நெசவாளர் குணசேகரன். இவர், தனது மனைவி விஜயா மற்றும் குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்பு வீட்டைப் பூட்டிவிட்டு ராமேசுவரம் கோயிலுக்குச் சென்றார். இந்த நிலையில், குணசேகரனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்த, அப்பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக அவருக்குத் தகவல் அளித்தனர். குணசேகரன் விரைந்து வந்து பார்த்தபோது, வீட்டில் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து குணசேகரன் அளித்த புகாரின் பேரில் நகர் போலீசார் நேற்று (ஜூன் 14) வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி