இந்த நிலையில், இவரது மனைவி, மகன், மகள் ஆகியோா் நேற்று வீட்டை பூட்டிவிட்டு சென்னை சென்றிருந்தனா். ராமச்சந்திரன் கோணிப்பை வியாபாரத்துக்குச் சென்றுவிட்டு அன்று மாலை வீடு திரும்பினாா்.
அப்போது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த ராமச்சந்திரன் கதவை திறந்து பாா்த்தபோது, உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 15 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.