ஆரணி: ஏரியில் மணல் கடத்திய 4 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கல்பூண்டி கிராமத்தில் உள்ள புத்தேரியிலிருந்து நேற்று (பிப்.17) அதிகாலை அனுமதியின்றி ஏரி மண்ணை லாரிகளில் கடத்திச் செல்வதைப் பார்த்த, அந்தப் பகுதி மக்கள் ஆத்திரமடைந்தனர். 

இதையடுத்து, ஏரிக்குச் சென்று மண் அள்ளிக் கொண்டிருந்த ஜேசிபி இயந்திரங்கள், மண் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த லாரிகளை சிறைபிடித்தனர். மேலும், இதுகுறித்து ஆரணி கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உதவி ஆய்வாளர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விசாரணையில், அனுமதியின்றி மண் அள்ளப்பட்டு கடத்தியது தெரிய வந்தது. அங்கிருந்த தலா 2 லாரிகள், ஜேசிபிக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும், இதுதொடர்பாக கல்பூண்டியை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடாசலம் (வயது 39), காசி மகன் தினேஷ் (வயது 26), கந்தன் மகன் அஜித் (வயது 27), ரவி மகன் கார்த்திக் (வயது 30) ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி