ஆரணி: தேர்வில் தோல்வி; மாணவி தற்கொலை முயற்சி

ஆரணி அருகே ஆயிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி, பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி