சிவன் கோயில் இடம் ஆக்கிரமிப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தில் சிவன் கோயில் இடத்தை ஆக்கிரமித்து பஞ்சாயத்து அலுவலக கட்டிடம் கட்டப்படுவதாக கூறி, அதற்கு தடை விதிக்கவும் கோயில் இடத்தை மீட்டுத்தரவும் வலியுறுத்தி, இன்று (22.05.2026) கிராம பொதுமக்கள் ஆரணி - வேலூர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி