ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் கல்விக் கண்காட்சி விழா.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்ற கல்வி கண்காட்சி விழாவில், மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். தொகுதி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.ஏ. பரிமளா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். சுமார் 400 மாணவர்கள் பாட வாரியாக தயார் செய்திருந்த செயல்திட்டங்களை பார்வையிட்டு கேட்டறிந்தார். வேலுநாச்சியார், எம்.ஜி.ஆர்., இயற்கணித அடையாளங்கள், மின்முலாம் பூசுதல், பாராளுமன்றம், ரோபோடிக்ஸ், இயற்கை எழில் காட்சி, கணினி சம்பந்தப்பட்ட படைப்புகள், எண் கணிதம் உள்ளிட்ட தலைப்புகளில் மாணவர்கள் செயல்திட்டங்களை காட்சிப்படுத்தியிருந்தனர். பள்ளித் தாளாளர் மணிமேகலை ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மதுமிதா வரவேற்றார். ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி