இதில் சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளரும் ஆரணி எம்.பி.யுமான தரணிவேந்தன் பங்கேற்று திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களில் உள்ள விவரங்களை கேட்டறிந்து உறுப்பினர் அட்டையை வழங்கினார். மேலும் தனியார் திருமண மண்டபத்தில் பாகமுகவர்கள் பிஎல்ஏ2, பிடி.ஏ, பிஎல்சி கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த வேண்டும் மற்றும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட்டு மக்களை அணுக வேண்டியது குறித்தும் ஆரணி எம்.பி. தரணிவேந்தன் எடுத்துரைத்து பேசினார். இதே போல் சேவூர் மற்றும் ஆதனூர் பகுதியில் ஒன்றிய செயலாளர் எஸ்.எஸ். அன்பழகன் ஏற்பாட்டிலும் திமுக உறுப்பினர் சேர்க்கை மற்றும் பாகமுகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
சிறுவன் பைக் ஓட்டி வாலிபர் பரிதாப பலி